» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பணி

திங்கள் 21, மார்ச் 2016 7:48:12 PM (IST)

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. அப்பணிக்கு  தகுதி உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பத்துடன்) இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் நேர்காணலுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைத்தளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.

பதவி: சுருக்கெழுத்து தட்டச்சர் (தற்காலிகமானது)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 - (ஊதிய கட்டு (PB-I) (மாதம் ஒன்றுக்கு)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் - தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மற்றும் இரண்டிலும் இளநிலை, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.04.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

அரியலூர் மாவட்டம்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டு பரிசீலிக்கப்படமாட்டாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno%20Typist.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory