» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

திருமணம் முடிக்க போகும் இளம்பெண்கள் மறக்காம படிங்க...



திருமணம் முடிக்க போகும் இளம் பெண்கள் ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத பெண்களும் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதம் மூலம் தான் முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும். ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். 

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர். 92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக,சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக அடைய‌ அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து. ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.

உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். 

சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.


மக்கள் கருத்து

makkalDec 10, 2015 - 06:28:52 PM | Posted IP 122.1*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education


Universal Tiles Bazar

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd



selvam aqua



Thoothukudi Business Directory