» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

பெண்களே உங்களின் மார்பகங்களை பராமரிக்க...............

பெண்மையின் இலக்கணமே மார்பகங்கள் தான். இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. 

மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்…

மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.

மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.

வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.

மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.


மக்கள் கருத்து

செல்வ துரைJun 16, 2016 - 01:30:12 PM | Posted IP 220.2*****

மாறி வரும் சூழல் பெண்களை அவர்கள் மார்பல்கை கூட கவனிக்க நேரம் இல்லாமல் பண்ணி விட்டது

makkalJan 26, 2016 - 02:19:00 PM | Posted IP 103.5*****

மார்பகங்கள் பெரிதாக வேறு என்ன செய்யவேண்டும்

தூதுக்குடியான்Nov 13, 2015 - 03:02:37 PM | Posted IP 115.2*****

வர வர tutyonline பலான வெப்சைட் மாதிரி ஆகிட்டு வருது... sexyயான படம் எப்பவும் கள்ள காதலை மைய படுத்திய செய்திகள்னு காரி துப்புற மாத்ரி செய்திகள் போடறீங்க...

makkalNov 12, 2015 - 05:56:31 PM | Posted IP 122.1*****

thankyou

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Panchai Dairy


Nalam Pasumaiyagam

CSC Computer Education




Universal Tiles Bazar


New Shape Tailors

Johnson's Engineers

Black Forest Cakes



Thoothukudi Business Directory