» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

பிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...



பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். ஏனென்றால் இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான்.
ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும். இதற்கு உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

அளவான டயட் : 

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது,கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தாய்ப்பால் கொடுத்தல் : 

தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும். இது உங்களுக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது.


உடற்பயிற்சியில் கவனம் தேவை :

பிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவர்களை ஆலோசித்த பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

யோகா பண்ணுங்க :

பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். எனவே யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals




Joseph Marketing


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory