» சினிமா » செய்திகள்

பிரசாந்தின் அந்தகன் பாடலை வெளியிட்ட விஜய்!

புதன் 24, ஜூலை 2024 5:56:54 PM (IST)



பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார். அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை உமாதேவி, ஏகாதேசி எழுத இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory