» சினிமா » செய்திகள்

சென்னை உலக சாதனை நிகழ்வில் சலசலப்பு: மன்னிப்புக் கேட்ட பிரபுதேவா

வெள்ளி 3, மே 2024 11:37:28 AM (IST)



சென்னையில் ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற உலக சாதனை நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததால் பிரபுதேவா மன்னிப்புக் கோரினார்.

நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவாவின் திரையுலக பங்களிப்பை பெருமைபடுத்தும் விதமாகவும், சர்வதேச நடன தினத்தையொட்டியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரபுதேவாவின் 100 தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு 100 நிமிடம் நடனமாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சிறியவர்கள், பெரியவர்கள் என 5000 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபு தேவா கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் தனது குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரபுதேவா நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், காலையிலிருந்து வெயிலில் காத்திருந்த சிறுவர்களும், அவர்களது பெற்றோர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

"பல்வேறு ஊர்களிலிருந்து காலை 6 மணிக்கே நிகழ்விடத்திற்கு வந்துவிட்டோம். 7.30 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்துவிடும் என்று கூறியதை நம்பி வந்தோம். ஆனால் 9 மணி வரை பிரபுதேவா வரவில்லை” என்று பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பிரபுதேவா மன்னிப்பு கோரியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். இவ்வளவு சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. என்னால் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அங்கே நடனமாடியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களை சந்திக்க முயற்சி செய்கிறேன். இறுதிப்பாடல் வரை லைவ்வில் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். எல்லோருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார். முன்னதாக நிகழ்விடத்தில் லைவ்வில் பேசிய அவர் பங்கேற்பாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory