» சினிமா » செய்திகள்
லஞ்சப் புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஷால் நன்றி!
சனி 30, செப்டம்பர் 2023 5:19:14 PM (IST)
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேயாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும. பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் நன்றி. ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்பைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் நேற்று ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவிததார்.
நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

