» சினிமா » செய்திகள்

மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள்... நடிகரின் ட்வீட்டால் சர்ச்சை!!

செவ்வாய் 23, மே 2023 4:40:14 PM (IST)



நடிகர் விஷ்ணு மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள் படத்தை பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளள்து.

நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் இன்று முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள் படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்த போட்டோவை எடுத்தேன். இந்த 2000 நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவு சர்ச்சையான நிலையில் நடிகர் வெண்ணிலா கிஷோரை கலாய்க்கும் விதமாக நகைச்சுவையாகவே இது பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அவருக்கு காமெடியான எமோஜியையே வெண்ணிலா கிஷோர் பகிர்ந்துள்ளார். காமெடி நடிகரின் இந்த பதிவுக்கு சிலர் நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாகவும் பதிலளித்து வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory