» சினிமா » செய்திகள்

லால் சலாம்: ரஜினியுடன் சிறப்பு தோற்றத்தில் கபில் தேவ்!

வெள்ளி 19, மே 2023 4:03:17 PM (IST)நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தில்  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்ததது. 

இந்நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், படத்தில் மொய்தீன் பாயாக நடிக்கும் ரஜினியுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory