» சினிமா » செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!

திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)



21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது என ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

28 வயதான கேரளத்தில் பிறந்த சஞ்சு  சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் கேப்டன். அதிரடியாகவும் பெரிய உழைப்பில்லாமல் சிக்ஸர்களை அடிப்பதிலும் சிறப்பு பெற்றவர். சிறிய வயதிலிருந்தே நடிகர் ரஜினியின் ரசிகர் என்று பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது. 

ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. சாம்சன் இதற்கு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் ரஜினியின் அழைப்பின் பேரில் சாம்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது: 

7 வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிலிருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன் நிச்சயம் ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory