» சினிமா » செய்திகள்

நடிகையை பலாத்காரம் செய்த வழக்கு: ஹாலிவுட் நடிகருக்கு 16 ஆண்டு சிறை

வெள்ளி 24, பிப்ரவரி 2023 4:52:00 PM (IST)

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. 

ஆஸ்கார் விருது பெற்ற முன்னாள் தயாரிப்பாளரும், ஹாலிவுட் நடிகருமான ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (70) எதிராக நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் கூறினர்.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2013ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த நடிகை ஜேன் டோ என்பவர் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில், அவருக்கு எதிராக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நியூயார்க்கில் பாலியல் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வரும் வெயின்ஸ்டீனுக்கு, அடுத்தடுத்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தண்டனையின் மூலம் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

நம்மFeb 25, 2023 - 07:27:55 AM | Posted IP 162.1*****

ஊர்லயும் பவிசூரரசு ன்னு ஒருத்தர் இருக்காரு... அவர என்ன பண்ணாங்க... ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory