» சினிமா » செய்திகள்
பகாசூரன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் - அன்புமணி பாராட்டு
சனி 18, பிப்ரவரி 2023 5:39:21 PM (IST)
‘பகாசூரன்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ படம் நேற்று (பிப்.17) திரையரங்குகளில் வெளியானது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் ‘பகாசூரன்’ சமூக அக்கறை கொண்ட படம் என குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனக்கு வாழ்த்துகள். சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!
செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
சனி 27, மே 2023 3:41:24 PM (IST)

60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி!!
வெள்ளி 26, மே 2023 3:52:17 PM (IST)

அயலான் vs ஜப்பான்: சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மோதும் கார்த்தி!
வியாழன் 25, மே 2023 3:22:50 PM (IST)

சின்னத்திரை இயக்குநரின் மனைவி தற்கொலை
வியாழன் 25, மே 2023 3:20:09 PM (IST)

மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள்... நடிகரின் ட்வீட்டால் சர்ச்சை!!
செவ்வாய் 23, மே 2023 4:40:14 PM (IST)
