» சினிமா » செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. 

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படம் இந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory