» சினிமா » செய்திகள்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்!
வெள்ளி 25, நவம்பர் 2022 3:21:19 PM (IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)

எம்.ஜி.ஆர் படத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய விஷால்
புதன் 25, ஜனவரி 2023 11:11:33 AM (IST)

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் நாட்டு நாட்டு பாடல்..!
புதன் 25, ஜனவரி 2023 10:59:12 AM (IST)

ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதியில் மாற்றம்?
செவ்வாய் 24, ஜனவரி 2023 12:36:29 PM (IST)

மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்!
திங்கள் 23, ஜனவரி 2023 12:05:59 PM (IST)
