» சினிமா » செய்திகள்
லவ் டுடே படத்தின் இயக்குநருக்கு ரஜினி பாராட்டு!
சனி 12, நவம்பர் 2022 5:19:17 PM (IST)

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் ரூ.50 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதீப் ரங்கநாதன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் என்ன கேட்கப்போகிறேன்? சூரியனுக்கு பக்கத்தில் நிற்பது போல இதமாக இருந்தது. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னுடைய படத்தைப் பார்த்து பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகளை எப்போதும் மறக்க மேட்டேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு
புதன் 8, பிப்ரவரி 2023 5:38:47 PM (IST)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்
புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST)

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)
