» சினிமா » செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் ஃபர்ஸ்ட் லுக்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
வெள்ளி 11, நவம்பர் 2022 10:24:06 AM (IST)

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
பன்முக திறன் கொண்டவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர், தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதையின் நாயகனாகவும் இப்போது நடித்து வருகிறார். கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை ஐசரி கணேஷ், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சி நேரலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்தப் படத்தை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.இந்தப் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கத்தரி உடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல போஸ் கொடுத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படம் வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு
புதன் 8, பிப்ரவரி 2023 5:38:47 PM (IST)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்
புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST)

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)
