» சினிமா » செய்திகள்

யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது!

வியாழன் 10, நவம்பர் 2022 12:35:26 PM (IST)இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கும் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. முன்னதாக கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, விக்ரம் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory