» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம்!

சனி 5, நவம்பர் 2022 11:30:13 AM (IST)ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" என்னும் புதிய படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

2012 ம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'வை ராஜா வை' படத்தை இயக்கினார். இதன்பின் டாகுமெண்டரி மற்றும் ஆல்பம் என்று இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறார்.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு 'லால் சலாம்' என பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் 2023ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருடன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கலந்துக் கொண்டனர். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும்  ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை- ஏ.ஆர்.ரஹ்மான். போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட் இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory