» சினிமா » செய்திகள்
கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெற்றி : இயக்குநருக்கு கார் பரிசளித்தார் தயாரிப்பாளர்!
புதன் 2, நவம்பர் 2022 3:52:16 PM (IST)

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்தார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியானதால் கூடுதலாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்தப் படம் இதுவரை ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வசூல் வெற்றியால் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கினார். நடிகர் கார்த்தி காரின் சாவியை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு
புதன் 8, பிப்ரவரி 2023 5:38:47 PM (IST)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்
புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST)

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)
