» சினிமா » செய்திகள்

கார் விபத்தில் நடிகை ரம்பாவின் இளைய மகள் காயம் மருத்துவமனையில் அனுமதி!!

செவ்வாய் 1, நவம்பர் 2022 3:33:59 PM (IST)கார் விபத்தில், நடிகை ரம்பா உயிர் தப்பினார். அவரது இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். `உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன ரம்பா, 'அருணாசலம்', 'காதலா காதலா', 'நினைத்தேன் வந்தாய்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கனடாவில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை ரம்பா காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காரின் மீது ரம்பாவின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவரும் மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களுக்காக பிரார்த்தியுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory