» சினிமா » செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிக்கும் சாமானியன்!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 12:19:00 PM (IST)நீண்ட இடைவெளிககு பிறகு ராமராஜன் ஹீரோவாக நடித்துள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படம் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் ராமராஜன்தான். அந்த அளவு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றன.

ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார். ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார். 

இது ராமராஜனுக்கு 45-வது படமாகும். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என  4 மொழிகளில் வெளியாகியுள்ளது.  எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இசை- அச்சு ராஜாமணி. கதை- வி கார்த்திக் குமார், திரைக்கதை, இயக்கம் - ஆர். ராஜேஷ். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory