» சினிமா » செய்திகள்

நிர்வாண போஸ் கொடுக்கவில்லை: ரன்வீர் சிங் வாக்குமூலம்

வெள்ளி 16, செப்டம்பர் 2022 5:18:50 PM (IST)

``சமூக வலைதளங்களில் நான் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றை யாரோ மார்பிங் செய்து வெளியிட்டிருக்கின்றனர்." - ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றுக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆபாசமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தது. அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். 

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கூறி போலீஸார் ரன்வீர் சிங் இல்லத்தில் நேரில் சென்று சம்மன் கொடுத்துவிட்டு வந்தனர். போலீஸார் சென்றபோது ரன்வீர் சிங் வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தார். வெளிநாட்டிலிருந்து வந்ததும் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ``சமூக வலைதளங்களில் நான் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றை யாரோ மார்பிங் செய்து வெளியிட்டிருக்கின்றனர். அவ்வாறு மார்பிங் செய்யப்பட்ட படத்தில் என்னுடைய அந்தரங்க உறுப்பு தெரிவது போன்று இருக்கிறது. மார்பிங் செய்யப்பட்ட படம் என்னுடையது கிடையாது.

எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஏழு புகைப்படங்களை பதிவேற்றம் செய்தேன். அந்த ஏழு படங்களில் ஒன்றைத்தான் மார்பிங் செய்து வெளியிட்டிருக்கின்றனர்" என்று போலீஸில் ரன்வீர் சிங் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்தப் படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். தடயவியல் ஆய்வில் அந்தப் படம் மார்பிங் செய்யப்பட்டது என்று தெரியவந்தால் இந்த வழக்கிலிருந்து ரன்வீர் சிங் விடுவிக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ரன்வீர் சிங் போட்டோ ஷூட்டின்போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படங்கள் பட்டியலில் இருக்கின்றனவா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்யவிருக்கின்றனர். ரன்வீர் சிங் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் ஆபாசம் இல்லாமல்தான் இருந்தன என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்களால் நாடு முழுவதும் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு கிளம்பியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory