» சினிமா » செய்திகள்

திரையுலகில் 47 ஆண்டுகள்: எளிமையாக கொண்டாடிய ரஜினி குடும்பத்தார்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 12:45:25 PM (IST)திரையுலகில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது இரண்டு மகள்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினியின் திரைப்பயணம் 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் தொடங்கியது. ஆரம்ப காலக்கட்டங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர், பின்னர் நாயகன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத்தொடங்கினார். 168 படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 

இதனை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், #47YearsOfRajinism என ஹேஷ்டேக் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு அவரின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சவுந்தர்யா தெரிவித்துள்ள வாழ்த்தில், ’’47 வருட மேஜிக். அப்பா, நீங்கள் தெய்வக் குழந்தை. உணர்வுபூர்வமானவர் நீங்கள்... வார்த்தைகளால் உங்களை விவரிக்க முடியாது. லவ் யூ தலைவா’’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மூத்த மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’’47 ஆண்டுகள் ரஜினியிசம்... கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்தது இது. உங்கள் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory