» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

வெள்ளி 29, ஜூலை 2022 11:50:41 AM (IST)பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடித்துள்ளனர்.  

இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ வருகிற ஜூலை 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory