» சினிமா » செய்திகள்

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்கலை. வழங்கல்!

செவ்வாய் 11, ஜனவரி 2022 4:18:40 PM (IST)



வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நடிகர், பாடகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பன்முக திறமைகளைக் கொண்டவரான சிலம்பரசன், தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முன்னனி கல்வி நிறுவனங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம். 

அந்த வகையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவின் போது நடிகர் சிலம்பரசன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory