» சினிமா » செய்திகள்

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

திங்கள் 29, நவம்பர் 2021 10:29:37 AM (IST)

பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மகதீரா படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவசங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முன்வந்தனர்.இந்நிலையில் இன்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory