» சினிமா » செய்திகள்

சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

வெள்ளி 15, அக்டோபர் 2021 12:36:10 PM (IST)



சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. இருப்பினும் இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், பேர் வச்சாலும் சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் பதிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏஜென்ட் கண்ணாயிரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், மனோஜ் பீதாவின் வஞ்சகர் உலகம் படத்தை நான் மிகவும் ரசித்தேன். தற்போது இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory