» சினிமா » செய்திகள்

தீபாவளி ரேஸில் ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு : 'மாநாடு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சனி 11, செப்டம்பர் 2021 11:54:07 AM (IST)

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து மெகரசைலா பாடல், மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படத்தின் அடுத்தப் பாடல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. நடிகர் அஜித்தின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிம்புவை ஒப்பிடுகையில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கு ரசிகர்களின் பலம் அதிகம். இரு பெரிய படங்களையும் சமாளித்து மாநாடு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் படம் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்பது வரலாறு. இருப்பினும் சினிமா ரசிகர்களுக்கு இந்த தீபாவளியின் போது நல்ல விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory