» சினிமா » செய்திகள்

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியீடு

செவ்வாய் 22, ஜூன் 2021 10:47:59 AM (IST)நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் தளபதி 65 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இன்று விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகி்றார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். "பீஸ்ட்” என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயின் "பீஸ்ட்” படம் குறித்த அப்டேட்கள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.  பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory