» சினிமா » செய்திகள்

சாதி, மதத்திற்கு எதிராக வாக்களித்தேன் : விஜய் சேதுபதி

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 3:45:34 PM (IST)

அனைத்து தேர்தல்களிலும் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர்.

நடிகர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சித்தார்த், யோகி பாபு, பிரபு, விக்ரம் பிரபு, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மக்களோடு மக்களாக வாக்குச்சாவடிகளில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். அவரைக் காண்பதற்காக அங்கு அவரது ரசிகர்கள் கூடிய நிலையில், அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே அனைத்து தேர்தல்களிலும் தனது நிலைப்பாடு என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory