» சினிமா » செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் சென்றார் விஜய்.. நடந்து சென்றார் விக்ரம்!!

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 12:46:41 PM (IST)நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். நடிகர் விக்ரம், தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வாக்களித்துள்ளார் 

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார். இந்நிலையில் நடிகர் விக்ரம், சென்னை பெசன்ட் நகர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களித்தார். இதன் விடியோ வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory