» சினிமா » செய்திகள்

கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்!

புதன் 31, மார்ச் 2021 12:17:59 PM (IST)

பழனி அருகே படப்பிடிப்பில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட அந்த மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை என்பன போன்ற புகார் எழுந்தன. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத காரணத்தால் படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர். கடந்த மாதம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory