» சினிமா » செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

செவ்வாய் 30, மார்ச் 2021 12:19:39 PM (IST)

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்கள் அடைந்த வெற்றியால், தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விக்ரம் படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனித்து வந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று இன்று உறுதியானது. இதனை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

லோகேஷ் வெளியிட்ட செய்தியில், என் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு தகவல. எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்வேன். விரைவில் இன்னும் பலத்துடன், திடத்துடன் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் இணைந்து கேக் வெட்டி லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திரையுலக நண்பர்கள் அவர் விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory