» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!

திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 பட்டம் வென்ற ஆரிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார். 

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், சோம், கேப்ரியலா, ரியோ என ஆறு பேர் கடைசி வாரப் போட்டியாளர்களாக இருந்தார்கள். இந்நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நடிகர் ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்றுள்ளார். ஆரிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. தனது மகளை அருகில் வைத்துக்கொண்டு பரிசுத்தொகையை ஆரி பெற்றார். ஆரிக்குப் பாராட்டு தெரிவித்து சக போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி இன்ஸ்டகிராமில் தெரிவித்ததாவது: இவருடைய வெற்றி நேர்மை, நீதி, விடாமுயற்சிக்கான வெற்றியாகும். அவர்தான் ஆரி அர்ஜூனன். இது எங்கள் அனைவரின் வெற்றி ஆரி. உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  நிஜ வாழ்வில் கதாநாயகனாக உள்ளவரை பிக் பாஸ் 4 வெற்றியாளராகத் தேர்வு செய்ததற்கு விஜய் டிவிக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரி மற்றும் அனிதா சம்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory