» சினிமா » செய்திகள்
தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இந்நிலையில், மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)
