» சினிமா » செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி: தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி

திங்கள் 23, நவம்பர் 2020 11:53:54 AM (IST)

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடந்தது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர்,  தேனாண்டாள் முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார். முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர்  337 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory