» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் : திடீர் வதந்திக்கு மறுப்பு

திங்கள் 23, நவம்பர் 2020 8:43:43 AM (IST)

"நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல் நிலை குறித்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்" என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

"ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் ஆரோக்கியத்தோடு உள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருக்கிறார்” என்று கூறினார். நடிகர் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையை கருத் தில் கொண்டு அரசியலில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்றும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் அவரது பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த் அந்த அறிக்கை என்னுடையது அல்ல. ஆனாலும் எனது உடல் நிலை குறித்து அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் உண்மைதான் என்று கூறியிருந்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளத் தில் நேற்று தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்து பலரும் விசாரிக்க தொடங்கினர். இது வதந்தி என்று ரஜினிகாந் தின் செய்தி தொடர்பாளர் மறுத்தார். அவர் கூறும்போது, "ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் ஆரோக்கியத்தோடு உள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருக்கிறார்” என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory