» சினிமா » செய்திகள்
சிம்பு கையில் இருந்தது ரப்பர் பாம்புதான்; உறுதி செய்தது வனத்துறை
ஞாயிறு 22, நவம்பர் 2020 11:50:14 AM (IST)
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான் பயன்படுத்தப்பட்டது என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.அந்தக் காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்த காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் விசாரித்து வருகின்றோம் என்று இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய விலங்கு நல வாரியமும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கினார். இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும்போது, ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
