» சினிமா » செய்திகள்

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநருக்கு திரையுலகினர் வேண்டுகோள்

வெள்ளி 20, நவம்பர் 2020 4:35:27 PM (IST)

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ரிலீஸ் பேர‌றிவாளன் என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார்.

இந்நிலையில் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.இது போல்,  பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநருக்கு நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory