» சினிமா » செய்திகள்

பிசியோதெரபி டாக்டருடன் பிரபுதேவா திடீர் திருமணம்?

வியாழன் 19, நவம்பர் 2020 9:15:49 PM (IST)

பிசியோதெரபி டாக்டருடன் நடிகர் பிரபுதேவா ரசகிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்காக முதல் மனைவியை பிரபுதேவா விவாகரத்தும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிந்ததால் திருமணம் நின்று போனது. பிரபுதேவாவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. 

அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கு திருமணம் முடிவாகி விட்டது என்றும், உறவு பெண்ணை மணக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. தற்போது பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகாரை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த பெண்ணிடம் சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது நெருக்கம் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பிரபுதேவா உறுதிப்படுத்தவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory