» சினிமா » செய்திகள்

நடிகர் கவுண்டமணி உடல்நிலை பற்றி வதந்தி: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சனி 24, அக்டோபர் 2020 4:27:06 PM (IST)

தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கவுண்டமணியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அது தவறான தகவல். கவுண்டமணி நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் உடல்நிலை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான போலீசில் புகார் அளிக்க இருக்கிறோம்.  என்று கவுண்டமணி தரப்பில் கூறப்பட்டது

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கவுண்டமணியின் வழக்கறிஞர் சார்பில், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தான் குடும்பத்துடன் நன்றாக இருப்பதாகவும் இதுபோன்ற வதந்திகளால் நிம்மதி கெடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory