» சினிமா » செய்திகள்

தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்: ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு

சனி 24, அக்டோபர் 2020 12:17:22 PM (IST)



தீபாவளியன்று மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஆர்ஜே பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படம் தீபாவளியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள் என்று ஆர்ஜே பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory