» சினிமா » செய்திகள்

பொங்கலுக்கு விஜய் - கார்த்தி நடித்த படங்கள் ரிலீஸ்?

வெள்ளி 23, அக்டோபர் 2020 12:33:16 PM (IST)பொங்கலுக்கு விஜய், கார்த்தி நடித்த படங்கள் உட்பட 4 படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவால் தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிபேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 5 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் மூடி விட்டனர். இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு பதிலாக பொங்கலை குறிவைத்துள்ளன. விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கார்த்தியில் சுல்தான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. எனவே அந்த படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது. 

இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள காடன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory