» சினிமா » செய்திகள்

அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து!

வெள்ளி 23, அக்டோபர் 2020 12:26:25 PM (IST)சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கன்னட திரையுலகில் இளம்நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா(39). இவர் நடிகை மேக்னா ராஜின் கணவர் ஆவார்.  சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜா, பிரபல நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த  ஜூன் 7 தேதி மாதம் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 39 வயதே ஆன அவரது மரணத்தால் கன்னட திரையுலகம் சோக கடலில் மூழ்கியுது.

அதன் பிறகு அவரது உடலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கனகபுரா ரோட்டில் உள்ள பண்ணை வீட்டு தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒக்கலிக சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது மனைவி மேக்னா ராஜ், கணவரின் நெற்றியில் உணர்வுப்பூர்வமாக முத்தமிட்டு நிரந்தரமாக அனுப்பி வைத்தார். இது காண்போரை கண் கலங்க வைத்தது. 

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் மேக்னா ராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில்,மேக்னா ராஜ் அமர்ந்திருக்க, அவரது அருகில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா ஆளுயர கட் அவுட்டுடன் புன்னகைத்த வீடியோ இணையத்தில் பார்ப்போரை உருக வைத்தது. இந்நிலையில் மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேக்னா-சிரஞ்சீவி குடும்பத்தினர் குழந்தையை வைத்துக்கொண்டு அன்பை பரிமாறும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இறந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருக்கிறார். மேக்னாவுக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory