» சினிமா » செய்திகள்

நடிகர் பொன்னம்பலத்தின் சிகிச்சை செலவை ஏற்றார் ரஜினி!!

சனி 11, ஜூலை 2020 5:18:40 PM (IST)

நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்க நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார்.

1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக் கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக் பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் புகழை அடைந்தார்.  இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு ரஜினியும் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து பொன்னம்பலத்துக்கு உதவ முன்வந்துள்ளதை ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory