» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜக்தீப் காலமானார்: பாலிவுட் பிரபலங்கல் இரங்கல்!!

வியாழன் 9, ஜூலை 2020 4:54:08 PM (IST)

ஷோலே உள்பட 400க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜக்தீப் காலமானார். அவருக்கு வயது 81.

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜக்தீப் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். ரமேஷ் சிப்பியின் ஷோலே படத்தில் சூர்மா வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். சல்மான் கானின் தந்தையாக அன்டாஸ் அப்னா அப்னா படத்தில் நடித்தார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் புகழை அடைந்தார். 

ஷோலே படத்தில் தான் ஏற்று நடித்த வேடத்தைக் கொண்டு ஒரு கதையை உருவாக்கி 1988-ல் சூர்மா போபலி என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ரேகா போன்றோ கெளரவ வேடங்களில் நடித்தார்கள். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஜக்தீப்பின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory