» சினிமா » செய்திகள்

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்கு உதவிய கமல்

வியாழன் 9, ஜூலை 2020 12:47:34 PM (IST)

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்துக்கு கமல்ஹாசன் உதவி புரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகர் பொன்னம்பலம். 1988ஆம் ஆண்டு வெளியான கலியுகம் திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். தொடர்ந்து கமலின் அபூர்வ சகோதரர்கள், வால்டர் வெற்றிவேல், ஆனஸ்ட்ராஜ், நாட்டாமை போன்ற திரைப்படங்களின் மூலமாகப் பலரையும் ரசிக்க வைத்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்னை காரணமாகத் தற்போது அவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அத்துடன் தினமும் அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தும் வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் பொன்னம்பலத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு அவருடைய குழந்தைகளின் கல்வி செலவையும் நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. பொன்னம்பலத்துக்கு கார்த்தி என்ற மகனும், கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். கமல்ஹாசனின் இந்த உதவிக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory