» சினிமா » செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்!!

ஞாயிறு 28, ஜூன் 2020 5:57:44 PM (IST)

சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் குடும்பத்தினருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். இந்த தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

மூ.வை. மாரிJun 30, 2020 - 01:51:08 PM | Posted IP 162.1*****

ஐயா, ரசினிகாந்த் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததற்கு நன்றி. ஆனால், அந்த படுகொலையை செய்த காவல்துறை அதிகாரிகளை பற்றி ஐயா ரசினி அவர்களின் கருத்து என்ன? ரசினி அவர்களின் நிலைப்பாடு என்ன?

23 ஆம் புலிகேசிJun 29, 2020 - 01:45:44 PM | Posted IP 157.5*****

நல்ல வேளை இங்கும் வந்து சமூக விரோதினு சொல்லல

rajaJun 29, 2020 - 11:01:15 AM | Posted IP 162.1*****

Subject innum uyirodathan iruku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory