» சினிமா » செய்திகள்
கரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் குமார் யோசனை
சனி 27, ஜூன் 2020 11:06:20 AM (IST)

சிவப்பு மண்டல பகுதிகளில் கரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் குமார் யோசனை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் சில மாவட்டங்களில் ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். அங்கு வசிப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கரோனா பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தால் வைரசை அழிக்க முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்றன. ஆஸ்திரேலியாவிலும் பரிசு வென்றது. இந்த ட்ரோன்களை வைத்து கரோனா பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தால் வைரசை கட்டுப்படுத்தலாம் என்றும் இந்த ட்ரோன்கள் 30 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்து விடும் திறன் கொண்டவை என்றும் அஜித்குமார் கூறியுள்ளார். இது நல்ல யோசனையாக இருந்ததால் உடனடியாக அமல்படுத்தி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். அஜித் கொடுத்த யோசனையை வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி
திங்கள் 4, ஜனவரி 2021 5:04:09 PM (IST)

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்
திங்கள் 4, ஜனவரி 2021 12:35:45 PM (IST)
