» சினிமா » செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்

வியாழன் 28, மே 2020 12:36:58 PM (IST)

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

கர்நாடகாவின் மடிகேரி என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் மெபினா மைக்கேல். ஒரு மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கிய அவர். கன்னட சின்னத்திரையில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பியாட்டே ஹுதுஹிர் ஹள்ளி லைப்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பெரும் புகழடைந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது நண்பர்களுடன் தனது சொந்த  ஊரான மடிகேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது தேவிஹள்ளி என்னும் பகுதிக்கு அருகே வந்தபோது அவர் பயணம் செய்த காரானது எதிரே வந்த ட்ராக்டருடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நால்வருமே பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மெபினா மரணமடைந்தார். இதுதொடர்பாக பெல்லூரு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேபினாவின் மறைவிற்கு கன்னட சின்னத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory